வாழ்வின் புதிர்களும் ஞானியின் திறவுகோலும்
About the Book
வாழ்வின் புதிர்களும் ஞானியின் திறவுகோலும் ஞானிகளுக்கு எதுவுமே புதிர்களல்ல. அவர்கள் உள்ளதை உள்ளபடி பார்க்க முடிபவர்கள். எனவேதான் இந்த சமூகம் தங்களிடமிருக்கும் கேள்விகளுக்கு சரியான விடை காண காலம்காலமாக ஞானிகளையே நாடி வந்திருக்கிறது. இந்த நூலில் உள்ள 300க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு சத்குரு அவர்களின் தீர்க்கமான பதில்களைப் படித்து முடிக்கும்போது நீங்களும் பிரமிப்பில் ஆழ்ந்துதான் போவீர்கள். இந்த நூலில்… • அன்பை வெளிப்படுத்தினால், பணியாளர்கள் ஒழுங்காக வேலை செய்வார்களா? • எனக்கு ஏற்ற சிறந்த கணவரை எப்படித் தேர்ந்தெடுப்பது? பல மகான்கள் அவதரித்தும், இந்த நாடு ஏன் பின்தங்கியே இருக்கிறது? • வாழ்க்கையை சிறப்பாக நடத்த பத்து எளிய வழிமுறைகள் சொல்லுங்களேன்… • உடல் இச்சை இயற்கை. ஆன்மிகம் அதை ஏன் கேவலமாகப் பார்க்கிறது? • மரண தண்டனை குறித்து உங்கள் கருத்து என்ன? • உடலைவிட்டு உயிர் நீங்கிய பின் அடுத்தகட்டம் என்ன? 0 என் மகன்கள் என் பேச்சை கேட்பதேயில்லை. மிகவும் வேதனையாக இருக்கிறதே… • ஒருவரின் சாபம் பலிக்குமா? • இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். ஏன்?
Reviews
There are no reviews yet.